< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம் - இம்மாதம் 4 நாட்கள் நடக்கிறது
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம் - இம்மாதம் 4 நாட்கள் நடக்கிறது

தினத்தந்தி
|
5 Nov 2022 10:29 AM IST

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு, பெயர் நீக்கம் செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணி நடைபெற்று வருகிறது. இதனால் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியன்று 18 வயது பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் இதுவரையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால் புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

அதன்படி பெயர் சேர்க்க படிவம் 6-ம், பெயர் நீக்கம் செய்ய படிவம் 7-ம், வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள், தொகுதி மாற்றம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8-ம் பதிவு செய்தும் வாக்குச்சாவடிகளில் அளிக்கலாம்.

இதற்கான முகாம் பகுதிகளில் அமைந்துள்ள கல்வி நிலையங்களில் வருகின்ற 12, 13,26 மற்றும் 27-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெறுகின்றது. இதையொட்டி, முகாம்களுக்கு நேரில் வந்து மேற்கூரிய உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து உரிய சான்று ஆவணங்களுடன் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்பிக்க வேண்டும் இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவலை காஞ்சீபுரம் கலெக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்