< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பணி மேற்பார்வையாளர்கள் பணியிடமாற்றம்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பணி மேற்பார்வையாளர்கள் பணியிடமாற்றம்

தினத்தந்தி
|
22 Feb 2023 2:12 PM IST

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகங்களில் பணிமேற்பார்வையாளர்களை அதிரடியாக பணியிடமாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணி மேற்பார்வையாளர் ஆர்.ராஜசேகரன் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும், கார்த்திகாதேவி ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணி மேற்பார்வையாளர் ராஜசேகரன், காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும், தனபால் குன்றத்தூர் அலுவலகத்திற்கும், மாரி மற்றும் மூவேந்தன் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணி மேற்பார்வையாளர்கள் சத்யா மற்றும் பாமாருக்மணி ஆகியோர் வாலாஜாபாத் அலுவலகத்திற்கும், கோபாலகிருஷ்ணன் ஸ்ரீபெரும்புதூர் அலுவலகத்திற்கும், வெங்கடேசன் மற்றும் சுகுமார் வாலாஜாபாத் அலுவலகத்திற்கும், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய பணிமேற்பார்வையாளர் கருணாகரன் உத்திரமேரூர் அலுவலகத்திற்கும், ராமராசு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சாலைகள் மற்றும் பாலங்கள் பிரிவு இளநிலை வரைதொழில் அலுவலராகவும், கோபி வாலாஜாபாத் அலுவலக பணிமேற்பார்வையாளரகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணிமேற்பார்வையாளர்கள் சீனிவாசன், துரைவேலு ஆகியோர் உத்திரமேரூர் அலுவலகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சீபுரம் ஊரக வளர்ச்சி முகமை அலுவலக சாலைகள் மற்றும் பாலங்கள் பிரிவு இளநிலை வரைதொழில் அலுவலர் ரவீந்திரன் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணிமேற்பார்வையாளரகவும், காஞ்சீபுரம் உபகோட்ட இளநிலை வரைதொழில் அலுவலர் ராஜன்பாபு, காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணிமேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணிமேற்பார்வையாளர் அசோக்குமார் ஸ்ரீபெரும்புதூர் அலுவலகதிற்கும், ஸ்ரீபெரும்புதூர் உபகோட்ட இளநிலை வரைதொழில் அலுவலர் போதநாதன் உத்திரமேரூர் அலுவலகதிற்கும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணிமேற்பார்வையாளர் லோகநாதன், ஸ்ரீபெரும்புதூர் உபகோட்ட இளநிலை வரைதொழில் அலுவலராகவும், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணிமேற்பார்வையாளர் கார்த்திகேயன், காஞ்சீபுரம் உபகோட்ட இளநிலை வரைதொழில் அலுவலராகவும், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணிமேற்பார்வையாளர் மாதங்கீஸ்வரி காஞ்சீபுரம் அலுவலகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவவாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்