காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் இல்ல திருமண வரவேற்பு
|காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் இல்ல திருமண வரவேற்பு விழா, தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவரும், குன்றத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளருமான படப்பை ஆ.மனோகரன் குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் ஆகியோரின் மகன் ம.வெற்றி செல்வனுக்கும், சென்னை கலைஞர் கருணாநிதி நகரை சேர்ந்த எச்.ஜோஷ்வா ஐசக், கிரேஸ்லின் ஐசக் தம்பதியின் மகள் ஜோ.ஜெசிக்கா ஏஞ்சலின் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா சென்னை திருவான்மியூர் ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருமண வரவேற்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
வரவேற்பு விழாவில் டி.ஆர்.பாலு எம்.பி, மு.க. தமிழரசு, மோகனா தமிழரசு, அமைச்சர்கள் ஏ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பி.ராஜா, சேகர்பாபு, சி.வி.கணேசன், எம்.பி.கள் ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன், க.செல்வம், கிரிராஜன், அந்தியூர் செல்வராஜ்,
மற்றும் அரசு தலைமை கொறடா கோ.வி. செழியன், அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, திமுக இணை அமைப்பு செயலாளர் அன்பகம், குன்றத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வந்தே மாதராம், குன்றத்தூர் ஒன்றய குழு துணை தலைவர் உமா மகேஷ்வரி, சிறுகளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அரி கிஷ்ணன், குன்றத்தூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளரும், ஒன்றிய கவுன்சிலருமான பால கிருஷ்ணன் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். மணமக்களை வாழ்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.