காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆய்வு
|காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் அம்ரித் சரோவர் திட்டத்தில் நீர் நிலைகள் புனரமைத்தல் குறித்தும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திறந்த வெளி கிணறுகள் மற்றும் அடர் வன காடுகள் போன்றவற்றை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து வளையக்கரனை ஊராட்சிக்கு சென்று அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சியில் மேற்கொள்ள இருக்கும் பணிகளுக்கான தேவைகள் குறித்த விவர பட்டியல் அனுப்பபட்டதை மாவட்ட திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி கள ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது குன்றத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், வளையக்கரணை ஊராட்சி மன்ற தலைவர் ராஜா என்கிற ராஜன், உதவி செயற்பொறியாளர் உள்பட பலர் உடனிருந்தனர்.
இதேபோல் எழிச்சூர், செரப்பணஞ்சேரி, வட்டம்பாக்கம் ஊராட்சிகளில் வளர்ச்சிபணிகளை ஆய்வு செய்த திட்ட இயக்குனர் நாட்டரசன்பட்டு ஊராட்சியின் அனைத்து தெருக்களையும் பார்வையிட்டு தேவையான அடிப்படை வசதிகளுக்கான விவர பட்டியலை அனுப்ப திட்ட இயக்குனர்
அலுவலர்களுக்கு ஆணை பிறப்பித்தார். இதில் ஊராட்சி செயலர்கள் திருமூர்த்தி, பார்த்தசாரதி உள்பட பலர் உடன் இருந்தனர்.