காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மாவட்ட பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
|தி.மு.க. அரசை கண்டித்து காஞ்சீபுரம் மாவட்ட பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது.
மத்திய அரசு இந்தியை திணிப்பதாக கூறி தாய்மொழி தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் தி.மு.க. அரசை கண்டித்து காஞ்சீபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்ட பொறுப்பாளர் பாஸ்கர், பா.ஜ.க. மாநில செயலாளர் மீனாட்சி நித்திய சுந்தரம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, மத்திய அரசு இந்தியை திணிக்கிறது என்று சொல்லி தமிழ் மொழியை தி.மு.க. அரசு எவ்வாறெல்லாம் அழித்து வருகிறது என பட்டியலிட்டு சிறப்புரையாற்றி கட்சி நிர்வாகிகளுடன் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டபொது செயலாளர்கள் வாசன், ருத்ர குமார், பார்த்தசாரதி, செல்வமணி, மாவட்ட செயலாளர் ஆனந்த் பாபு, மாவட்ட துணைத்தலைவர் செந்தில் குமார், மாநகர் மேற்கு தலைவர் ஜீவானந்தம், கிழக்கு தலைவர் ஞான சூரியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.