< Back
மாநில செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமை திட்ட பதிவு முகாமில் காஞ்சீபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஆய்வு
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமை திட்ட பதிவு முகாமில் காஞ்சீபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஆய்வு

தினத்தந்தி
|
28 July 2023 4:07 PM IST

கலைஞர் மகளிர் உரிமை திட்ட பதிவு முகாமை காஞ்சீபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக அரசின் சார்பில் காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதியில் காஞ்சீபுரம் வைகுண்டபுரம் தெரு, அசோக் நகர் பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட பதிவு முகாம் நடைபெற்றது. முகாமை காஞ்சீபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன் நேரில் சென்று பார்வையிட்டு, பதிவு செய்ய வரும் விண்ணப்பதாரர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? முறையாக பதிவு செய்யப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது காஞ்சீபுரம் தாசில்தார் புவனேஸ்வரன், ஒன்றிய கவுன்சிலர் ராம் பிரசாத், மாநகராட்சி கவுன்சிலர் சித்ரா ராமச்சந்திரன் மற்றும் குடிமை பொருள் வழங்கல் அலுவலர்களும் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்