கனல் கண்ணன் ஜாமீன் மனு தள்ளிவைப்பு - சென்னை ஐகோர்ட்டு
|சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளி வைத்துள்ளது.
சென்னை,
சென்னை மதுரவாயலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் கோவில் முன்பு உள்ள பெரியார் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறினார். அதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து கனல் கண்ணனை கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை எழுப்பூர் கோர்ட்டும், சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டும் அடுத்தடுத்து தள்ளுபடி செய்தன. அதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் கனல் கண்ணன் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கனல் கண்ணன் ஜாமீன் மனு தொடர்பாக பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, கனல் கண்ணன் ஜாமீன் மனு மீதான விசாரணையை செப்டம்பர் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.