< Back
மாநில செய்திகள்
கம்பன் பெருவிழா ஆலோசனை கூட்டம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கம்பன் பெருவிழா ஆலோசனை கூட்டம்

தினத்தந்தி
|
4 Jun 2023 6:40 PM GMT

கம்பன் பெருவிழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 48-ம் ஆண்டு கம்பன் பெருவிழா ஆலோசனை கூட்டம் கம்பன் கழக தலைவர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் கம்பன் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூடுதல் செயலாளர் பாரதி வரவேற்றார். கம்பன் கழகச் செயலாளர் சம்பத்குமார் விழா குறித்து விளக்கிக் கூறினார். ஜூலை 14-ந் ேததி (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஜூலை 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை பத்து நாட்கள் பெருவிழா கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது. வழக்கம் போல் நகர்மன்றத்தில் இந்த விழா நடைபெறும். சிறந்த தமிழ் அறிஞர்களை பத்து நாட்களும் அழைத்து நிகழ்ச்சிகளை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது. தினமும் மாலை 5.30 மணிக்கு தொடங்கி 9:30 மணி வரை நிகழ்வுகள் நடைபெறும். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணைத் தலைவர்கள் எம்.ஆர்.எம். முருகப்பன், பேக்கரி மகராஜ், அருண் சின்னப்பா, பொருளாளர் கோவிந்தராஜன், தொழிலதிபர் ரா. கருணாகரன் மற்றும் விழா குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்