< Back
மாநில செய்திகள்
கம்பம், பெரியகுளத்தில்காந்தி சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம்
தேனி
மாநில செய்திகள்

கம்பம், பெரியகுளத்தில்காந்தி சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம்

தினத்தந்தி
|
3 Oct 2023 12:15 AM IST

சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில், கம்பம், பெரியகுளத்தில் காந்தி சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி காந்தி சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று கம்பத்தில் நடந்தது. இதையொட்டி சங்க நிர்வாகிகள் கையில் ஒரு மனுவுடன் கம்பத்தில் உள்ள காந்தி சிலைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சீர்மரபினர் மக்களுக்கு தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அரசாணை 26-ஐ திரும்ப பெற வேண்டும்.

டி.என்.டி. சமூக பொருளாதார கணக்கெடுப்பு தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். டி.என்.டி. நலவாரிய உறுப்பினர் சேர்க்கையை துரிதமாக கணினி மயமாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை காந்தி சிலையின் கைகளில் கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதேபோல், சீர்மரபினர் நல சங்க சார்பில், பெரியகுளம் தென்கரை மூன்றாந்தல் பகுதியில் உள்ள காந்தி சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது.

மேலும் செய்திகள்