< Back
மாநில செய்திகள்
கம்பம் பஸ் நிலைய பகுதியில்சாலையோரம் நிறுத்தப்படும் ஆட்டோக்களால் விபத்து அபாயம்
தேனி
மாநில செய்திகள்

கம்பம் பஸ் நிலைய பகுதியில்சாலையோரம் நிறுத்தப்படும் ஆட்டோக்களால் விபத்து அபாயம்

தினத்தந்தி
|
26 Feb 2023 12:15 AM IST

கம்பம் பஸ் நிலைய பகுதியில் சாலையோரம் நிறுத்தப்படும் ஆட்டோக்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

கம்பம் போக்குவரத்து சிக்னலில் இருந்து பழைய பஸ் நிலையம், மாரியம்மன் கோவில் வரை சாலையின் இரு புறங்களிலும் பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைக்காரர்கள் சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், பொதுமக்கள் நடந்து செல்ல சிரமம் அடைகின்றனர். ஏற்கனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பழைய பஸ் நிலையம் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. இந்நிலையில் சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கம்பம் போக்குவரத்து சிக்னலில் இருந்து மாரியம்மன் கோவில் வரை பொதுமக்கள் நடந்து செல்லக்கூடிய நடைபாதைகளை கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும் பழைய பஸ் நிலையம் பகுதிகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே நடைபாதை ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்