< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
கம்பராய பெருமாள் கோவிலில்சீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
|20 Jan 2023 12:15 AM IST
கம்பம் கம்பராய பெருமாள் கோவிலில் சீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கம்பம் கம்பராய பெருமாள் கோவிலில் ரூ.5 கோடியில் திருமண மண்டபம், சஷ்டி மண்டபம் சீரமைத்தல், ராஜகோபுரம் மேம்படுத்துதல், உணவுக்கூடம், சிமெண்டு சாலை, துளசி, பவளமல்லி நந்தவனம், சஷ்டி மண்டபம் தட்டோடு பதித்தல் மற்றும் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவிலில் பணிகள் நடைபெற உள்ள திருமண மண்டபம், கடைகள் ஆகிய இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வில் இந்து சமய அறநிலையத் துறை திண்டுக்கல் உதவிகோட்ட பொறியாளர் செல்வம், செயற்பொறியாளர் சுந்தரப்பன், அறநிலையத்துறை ஆய்வாளர் தியாகராஜன், கம்பராய பெருமாள் கோவில் நிர்வாக அலுவலர் சுரேஷ், இளநிலை பொறியாளர் அழகர்சாமி. கோவில் அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.