தேனி
கம்பம் அரசு மருத்துவமனையில்கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்:மருத்துவ அலுவலரிடம் மனு
|கம்பம் அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று மருத்துவ அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய கட்சி சார்பில், மருத்துவ அலுவலர் பொன்னரசனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கம்பம் அரசு மருத்துவமனை கேரள மாநில எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் கம்பம் மற்றும் சுற்றுப்புற கிராமங்கள் மட்டுமின்றி இடுக்கி மாவட்டத்தில் இருந்து தினந்தோறும் சுமார் 1200-க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக வந்து செல்கின்றனர்.
மேலும் இங்கு அவசர சிகிச்சை, பொது மருத்துவம், தீக்காயம், சித்த மருத்துவம், குழந்தைகள் நல பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, கர்ப்பிணி பெண்களுக்கான சீமாங்க் சென்டர், டயாலசிஸ் சிகிச்சை உள்பட 35-க்கும் மேற்பட்ட மருத்துவ பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் அவசர சிகிச்சைக்காக வரக்கூடிய பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். எனவே மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.