விழுப்புரம்
காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
|அனந்தபுரம் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் தரிசனம்
செஞ்சி
செஞ்சி தாலுகா அனந்தபுரத்தில் பழமை வாய்ந்த காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பு மற்றும் பூஜை நடைபெறாமல் சிதில மடைந்து காணப்பட்ட இக்கோவிலை ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து புணரமைத்து புதுப்பித்ததையடுத்து கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, கோபூஜை, சாமி விக்ரஹங்களுக்கு கண் திறத்தல், வாஸ்துசாந்தி, கலசங்கள் யாகசாலையில் எழுந்தருளல், எஜமானமஹா சங்கல்பம், நாடிசந்தானம், பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்று காமாட்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் கோவில் விமான கலசத்துக்கும் அதைத் தொடர்ந்து மூலவர் காமாட்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் அனந்தபுரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் அனந்தபுரம் விஸ்வகர்மா சமூகத்தினர், ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.