திருநெல்வேலி
காமராஜர் நினைவு தினம்
|பரப்பாடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் காமராஜர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இட்டமொழி:
பரப்பாடி நகர நாம் தமிழர் கட்சி சார்பில் காமராஜர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் காமராஜர் உருவசிலைக்கு மாலை அணிவிக்கபட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகபெருமாள், தலைவர் ஸ்டாலின் பிரபு, நெல்லை ஜெயசீலன், ஜேக்கப், ரமேஷ், மோசஸ், கோடன்குளம் ஜோஸ்வா, சுடலை, மாரியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
காமராஜர் நினைவு தினத்தையொட்டி, வள்ளியூரில் உள்ள அவரது சிலைக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெபஸ்டின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட பொருளாளர் சாமுவேல், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வெள்ளத்துரை, மாவட்ட துணை செயலாளர் அருள்ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சான்றோர் நாடார் சங்கம் சார்பில் மாவட்ட துணைத்தலைவர் ஜோஸ்வா நாடார், வள்ளியூர் ஜெரிஸ் நாடார் ஆகியோர் காமராஜர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.