< Back
மாநில செய்திகள்
கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் குரு பூர்ணிமா நிகழ்ச்சி
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் குரு பூர்ணிமா நிகழ்ச்சி

தினத்தந்தி
|
4 July 2023 12:15 AM IST

கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் குரு பூர்ணிமா நிகழ்ச்சி நடந்தது.

கோவில்பட்டி:

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நேற்று குரு பூர்ணிமா நிகழ்ச்சி சத்திய சாய் சேவா சமிதி, பால விகாஸ் பிரிவின் சார்பாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம், பள்ளி பொருளாளர் ரத்னராஜா, பள்ளி குழு உறுப்பினர்கள் தாழையப்பன், தங்கமணி, பால்ராஜ், மனோகரன் மற்றும் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இதில் 120-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் தங்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்து ஆசி பெற்றனர். பள்ளி முதல்வர் பிரபு வரவேற்று பேசினார். சத்ய சாய் சேவா சமிதியின் ஒருங்கிணை ப்பாளர் ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். பால விகாஸ் கல்விப் பிரிவுஒருங்கிணைப்பாளர் வி. ரகுபதி ராஜலட்சுமி மற்றும் சாய் சமிதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்