அரியலூர்
அரசு பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா
|அரசு பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாளையொட்டி கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் அறிவழகன் தலைமை தாங்கினார். இதையொட்டி காமராஜரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு பள்ளி மாணவ- மாணவிகளுக்கிடையே நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. மேலும் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் காமராஜரை பற்றி பள்ளி தமிழாசிரியர் ராமலிங்கம், ஆசிரியர் சங்கர் ஆகியோர் பேசினார்கள். இதையடுத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 10 உறுதிமொழிகளை மாணவிகள் எடுத்துக்கொண்டனர்.