< Back
மாநில செய்திகள்
காமராஜர் பிறந்த நாள் விழா
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

காமராஜர் பிறந்த நாள் விழா

தினத்தந்தி
|
15 July 2022 6:55 PM GMT

டி.எல்.ஆர். கல்வி குழுமத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கத்தில் உள்ள டி.எல்.ஆர். கல்வி குழுமத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கல்வி நிறுவன தலைவர் ஏ.எல்.ரவி தலைமை தாங்கினார். தாளாளர் கோமதிரவி முன்னிலை வகித்தார். கல்வியியல் கல்லூரி முதல்வர் டி.திலகவதி, ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பி.நிர்மலா, கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டி.கவுதமன் ஆகியோர் காமராஜரின் சிறப்புகள், தொண்டுகளை எடுத்துக் கூறினர்.

விழாவில் கல்லூரி குழும பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்