< Back
மாநில செய்திகள்
காமராஜர் பிறந்த நாள் விழா
தென்காசி
மாநில செய்திகள்

காமராஜர் பிறந்த நாள் விழா

தினத்தந்தி
|
15 July 2023 12:15 AM IST

சுரண்டையில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

சுரண்டை:

சுரண்டையில் த.மா.கா. சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. மாநில பொதுச்செயலாளரும், இந்திய தொலை தொடர்பு துறை ஆலோசனை குழு உறுப்பினருமான என்.டி.எஸ்.சார்லஸ் தலைமை தாங்கினார். இளைஞரணி ராஜீவ் காந்தி, மாணவரணி பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் அருண்தர்மராஜ் வரவேற்று பேசினார். சுரண்டை சிவகுருநாதபுரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் மாணவ மாணவிகள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்கினர்.

இதேபோன்று பரங்குன்றாபுரத்தில் நடந்த விழாவில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர நிர்வாகிகள் சரவணன், ரவிச்சந்திரன், கடல் அருணாசலம், நவமணி, ஜேசுதாஸ், அழகர்சாமி, வெள்ளைச்சாமி, ராஜா, முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்