< Back
மாநில செய்திகள்
ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன் நியமனம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

கோப்புப்படம்

மாநில செய்திகள்

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன் நியமனம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தினத்தந்தி
|
21 Sept 2024 9:25 PM IST

மக்கள் நீதி மய்யம் தலைவராக மீண்டும் கமல்ஹாசன் நியமனம் செய்யப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவராக கமல்ஹாசன் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுவில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவராக மீண்டும் கமல்ஹாசன் நியமனம் செய்யப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "பகுத்தறிவுச் சிந்தனையும் சமத்துவ நோக்கமும் கொண்டு பணியாற்றிவரும் அருமை நண்பர் கமல்ஹாசன் மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் - அவரது அரசியல் பயணம் மென்மேலும் சிறக்கவும் என்னுடைய வாழ்த்துகள்" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்