கமல்ஹாசனுடன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திப்பு
|ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகத்தான வெற்றியை பெற்றார்.
சென்னை,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகத்தான வெற்றியை பெற்றார். இதைத்தொடர்ந்து சட்டசபையில் சபாநாயகர் முன்னிலையில் அவர் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுக்கொண்டார். வரும் 20-ந்தேதி சட்டசபையில் நடக்கும் பட்ஜெட் கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பங்கேற்க இருக்கிறார்.
இதற்கிடையே, இடைத்தேர்தலில் தன்னை ஆதரித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை அவர் சந்தித்து பேசினார். தனக்கு ஆதரவு அளித்ததற்காக கமல்ஹாசனுக்கு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நன்றி தெரிவித்துக்கொண்டார். இது தொடர்பாக கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் செல்வ பெருந்தகை ஆகியோர் என்னை சந்தித்து பேசினர். ஈரோடு கிழக்கு பிரசாரத்திற்காக அவர்கள் நன்றி தெரிவித்தனர். நீண்ட காலத்திற்கு பிறகு சட்டசபையில் ஒலிக்க இருக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குரலுக்காக காத்திருக்கிறேன் என அவரை வாழ்த்தினேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.