< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை, சேலம் மண்டல நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை
|28 April 2023 4:31 PM IST
நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கோவை,
கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை மற்றும் சேலம் மண்டல நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, பூத் கமிட்டிகள் அமைப்பது, கட்சி கூட்டணி மற்றும் பல்வேறு உள்கட்சி விவகாரங்கள் தொடர்பாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.