< Back
மாநில செய்திகள்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்
மாநில செய்திகள்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

தினத்தந்தி
|
24 Aug 2022 6:41 PM IST

தொழில்நுட்ப கோளாறு காரணமாக கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் அலகு 2-ல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் இயங்கி வரும் சென்னை அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் பல மாநிலங்களின் மின் தேவைக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த அணுமின் நிலையத்தில் அலகு 2- ல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட் டுள்ளது.

ஒரு வாரத்தில் தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி துவங்கப்படும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே தொழில் நுட்ப கோளாறு காரணமாக மூன்று ஆண்டுகளாக அலகு 1-ல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்