< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கள்ளர் பள்ளி சீரமைப்பு விவகாரம்: மதுரையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்
|24 Aug 2024 11:30 AM IST
அ.தி.மு.க. சார்பில் மதுரையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை,
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக்கல்வி துறையுடன் இணைக்கும் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து அறிவிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம், திட்டமிட்டபடி நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி அ.தி.மு.க. சார்பில் மதுரையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். மேலும், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.