< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி: பேக்கரியில் கெட்டுப்போன கேக் விற்பனை செய்யப்பட்டதாக பரவிய வீடியோ - அதிகாரிகள் அதிரடி ஆய்வு
|23 Jun 2023 6:12 PM IST
விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன் தலைமையில் பேக்கரியில் அதிரடி ஆய்வு நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேக்கரியில் கெட்டுப்போன கேக் விற்பனை செய்யப்பட்டதாக விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இந்த வீடியோ குறித்த தகவல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றனது.
இதையத்த்து விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன் தலைமையில் பேக்கரியில் அதிரடி ஆய்வு நடைபெற்றது. உணவு பொருட்களின் தரம், காலாவதி ஆகும் காலம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், சர்ச்சைக்குரிய பிளாக் பாரஸ்ட் கேக் மாதிரிகளை சேகரித்த அதிகாரிகள் அவற்றை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.