< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரம்: 36 யூடியூப் சேனல்கள் மீது வழக்குப்பதிவு
|22 Sept 2022 12:48 PM IST
கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரத்தில் 36 யூடியூப் சேனல்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின் போது போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியது மற்றும் பள்ளி பொருட்களை சேதப்படுத்தினர்.
இது கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண விவகாரத்தில் போலியான தகவல்களை பரப்பியதாக 36 யூடியூப் சேனல்கள் மீது 4 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 6-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களுக்கு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.