< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி: மலை பகுதியில் கள்ளச்சாராய ஊறல்கள் - அதிரடி காட்டிய போலீசார்
|13 March 2023 12:08 AM IST
கல்வராயன் மலை பகுதியில் பதுக்கி வைத்திருந்த சாராய ஊறல் பேரல்களை போலீசார் அடித்து உடைத்தனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் பதுக்கி வைத்திருந்த சாராய ஊறல் பேரல்களை போலீசார் அடித்து உடைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. மோகன்ராஜ் உத்தரவின்பேரில், கச்சிராயப்பாளையம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், 17 பேரல்களில் இருந்த மூன்று ஆயிரத்து 400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை கண்டுபிடித்து அழித்தனர்.