< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி கலவரம்: கனியாமூர் பள்ளியில் நீதிபதி திடீர் ஆய்வு
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரம்: கனியாமூர் பள்ளியில் நீதிபதி திடீர் ஆய்வு

தினத்தந்தி
|
30 Aug 2022 2:21 PM IST

கனியாமூர் பள்ளியில் மாவட்ட 2-வது குற்றவியல் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முகமது அலி இன்று ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக கடந்த மாதம் 17-ந் தேதி நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின் போது போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியது மற்றும் பள்ளி பொருட்களை சேதப்படுத்தினர்.

இது கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், கனியாமூர் பள்ளியில் கள்ளக்குறிச்சி மாவட்ட 2-வது குற்றவியல் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முகமது அலி இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். கலவரத்தால் பள்ளியில் ஏற்பட்டுள்ள சேதங்கள், தீ வைத்து கொளுத்தியதில் சேதமடைந்த வாகனங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலவரத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ள அறிக்கை சரியாக உள்ளதாக என்பது தொடர்பாகவும் ஆய்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்