< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி கலவரம்; இதுவரை 192 பேர் கைது - காவல்துறை தகவல்
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரம்; இதுவரை 192 பேர் கைது - காவல்துறை தகவல்

தினத்தந்தி
|
18 July 2022 6:36 AM IST

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் பள்ளி முழுமையாக சூறையாடப்பட்ட நிலையில், பள்ளி வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

இந்த போராட்டத்தின் போது, காவல்துறையினர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், பலர் காயமடைந்தனர். இந்த நிலையில் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, இந்த செயலில் ஈடுபட்டவர்களை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த கலவரம் தொடர்பாக இன்று காலை வரை 192 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறைனர் தெரிவித்துள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்