< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி: முக்கிய குற்றவாளிகளை பிடிக்க தொடரும் போலீஸ் வேட்டை

ஜோசப் ராஜ், ராமர் 

மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி: முக்கிய குற்றவாளிகளை பிடிக்க தொடரும் போலீஸ் வேட்டை

தினத்தந்தி
|
23 Jun 2024 5:02 AM IST

கள்ளக்குறிச்சி விஷசாராய விவகாரத்தில் கைதானவர்களில் 3 போ் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சோி பகுதியில் விஷ சாராயம் குடித்ததில் 55 போ் உயிாிழந்தனா். 140-க்கும் மேற்பட்டோா் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை மற்றும் ஒருநபர் ஆணையம் விசாரணை என்று பல்வேறு வகையில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

அதேவேளையில் சாராயம் விற்பனையில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கைது நடவடிக்கையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். இதுவரை 2 பெண்கள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டவர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதில் முதலில் தனது மனைவியுடன் கைதான கருணாபுரத்தை சேர்ந்த கன்னுக்குட்டியை தொடர்ந்து சங்கிலி தொடர் போன்று அடுத்தடுத்து ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், கச்சிராயப்பாளையம் போலீசாரால் மாதவச்சோியை சோ்ந்த முத்து மகன் ராமா் (36) கைது செய்யப்பட்டார். அவரிடம் சாராயம் எங்கிருந்து கிடைத்தது என்று போலீசார் விசாரித்ததில், சேஷசமுத்திரத்தை சோ்ந்த பொியசாமி மகன் சின்னதுரையை(36) நோக்கி கையை காண்பித்தார்.

இதன் தொடர்ச்சியாக அவரையும் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் விாியூரை சோ்ந்த ஜோசப்ராஜா என்கிற நடுப்பையன் (35) என்பவர் தான் தனக்கு சாராயம் சப்ளை செய்தார் என்றார். இதையடுத்து ஜோசப் ராஜாவையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

இவர்கள் அனைவருக்கும் தலைவராக யார் செயல்பட்டார்? அவர் எங்கு உள்ளார்? என்பதை நோக்கி விசாரணையை போலீசார் விரிவுப்படுத்தி இருக்கிறார்கள்.

இதற்கிடையே கைது செய்யப்பட்டவர்களில் சின்னதுரை, ஜோசப்ராஜா, ராமர் ஆகிய 3 போ் மீதும் கொலை வழக்கு, மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருளை தொிந்தே விற்பனை செய்தல், பணம் சம்பாதிக்க வேண்டிய நோக்கத்துடன் விஷத்தன்மை கூடிய சாராயத்தை விற்பனை செய்தல், விஷத்தன்மை உள்ள சாராயத்தை பதுக்கி வைத்தல் போன்ற பிாிவின் கீழ் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும், ஜோசப்ராஜா உள்ளிட்ட 3 பேருக்கு மெத்தனால் கிடைத்து, அவர்கள் அதை சிறு, சிறு சாராய வியாபாரிகளிடம் கொடுத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதனடிப்படையில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளார்கள்.

போலீசாரின் விசாரணை ஒருபுறம் இருக்க, தற்போது கைதானவர்கள் குறித்தும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏனெனில், கச்சிராயப்பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்ட சின்னத்துரையிடம் இருந்து தான் பல்வேறு வியாபாரிகளுக்கு விஷசாராயம் சப்ளையாகி இருக்கிறது.

இந்த சின்னத்துரை மீது கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் போலீஸ் நிலையங்களில் சாராயம் விற்பனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு இருக்க சின்னத்துரையை போலீசார் கண்காணித்து வந்திருந்தால், இவ்வளவு பெரிய துயரத்தை கள்ளக்குறிச்சி சந்தித்து இருக்காது. ஆனால் இதை செய்ய போலீசார் தவறிவிட்டதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டுகிறார்கள்.

மேலும், ராமரிடம் இருந்து சாராயம் வாங்கி குடித்தவர்களும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதில் ராமரின் தந்தையும் விதிவிலக்கல்ல. அதாவது, ராமர் வைத்திருந்த சாராயத்தை அவரது தந்தையான பழனிமுத்து என்பவர் வாங்கி குடித்து இருக்கிறார். இதனால் அவருக்கும் உடல்நிலையில் பாதிப்பு நேர்ந்து, சேலத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் செய்திகள்