< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: தேடப்பட்டு வந்த  முக்கிய நபர்  சென்னையில் கைது
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: தேடப்பட்டு வந்த முக்கிய நபர் சென்னையில் கைது

தினத்தந்தி
|
23 Jun 2024 8:10 AM IST

சென்னை எம்ஜிஆர் நகரில் பதுங்கி இருந்த சிவகுமாரை இன்று காலை மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. விஷ சாராய சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.ஓய்வுபெற்ற ஐகோா்ட்டு நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒருநபா் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.

விஷசாராயம் விற்பனை செய்தவர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களை போலீசார் அடுத்தடுத்து கைது செய்து அதிரடி காட்டி வருகின்றனர். இந்த நிலையில், விஷ சாராய வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் இன்று சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை எம்ஜிஆர் நகரில் பதுங்கி இருந்த சிவகுமாரை இன்று காலை மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிவகுமாரை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்