< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 58ஆக உயர்வு
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 58ஆக உயர்வு

தினத்தந்தி
|
24 Jun 2024 7:00 AM IST

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி சட்டவிரோதமாக விஷ சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதை அப்பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் வாங்கிக்குடித்துள்ளனர். மெத்தனால் கலக்கப்பட்ட விஷ சாராயத்தை குடித்ததால் பலருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட பலரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலரும் உயிரிழந்தனர். ஒரு சிலர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். ஒருசிலர் வீட்டிலேயே உயிரிழந்தனர்.

இந்நிலையில், விஷ சாராயம் குடித்து நேற்றுவரை 57 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

அதன்படி, விஷ சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவங்கூரை சேர்ந்த மணிகண்டன் என்ற 34 வயது இளைஞர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதன் மூலம் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்