< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  360 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்  செந்தில்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 360 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் செந்தில்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்

தினத்தந்தி
|
8 Sept 2022 7:54 PM IST

கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 360 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை செந்தில்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.

கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கென்னடி தலைமை தாங்கினார். செயலாளர் கிரிராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் கீதா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்துகொண்டு 360 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், மாணவிகள் சைக்கிளில் செல்லும்போது பாதுகாப்புடனும், கவனமுடனும் செல்ல வேண்டும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் சொல்படி கேட்டு நன்றாக படித்து அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றார். இதில் தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவரும், அ.தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளருமான ராஜசேகர், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் பச்சையாப்பிள்ளை, கூட்டுறவு சங்க தலைவர் ரங்கன், தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், நகராட்சி கவுன்சிலர்கள் யுவராணி, முருகன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்