< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாற்றம்
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாற்றம்

தினத்தந்தி
|
29 April 2023 6:56 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கிருஷ்ண பிரியா நியமிக்கப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி,

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வரும் சரஸ்வதி பணியிட மாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் சரஸ்வதிக்கு வேறு எதுவும் பணிகள் வழங்கப்படவில்லை என்றும் இது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கிருஷ்ண பிரியா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்று வரும் அவர், கள்ளக்குறிச்சிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த ஆண்டு மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்குள்ள பல அதிகாரிகள் மாற்றப்பட்டனர். தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ள சரஸ்வதி, கள்ளக்குறிச்சி கலவரம் நடந்த சமயத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்