< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
கனியாமூரில் சக்தி மெட்ரி பள்ளியில் கலெக்டர் ஷ்ரவன்குமார் ஜடாவத் ஆய்வு
|20 July 2022 11:26 PM IST
கனியாமூரில் சக்தி மெட்ரி பள்ளியில் கலெக்டர் ஷ்ரவன்குமார் ஜடாவத் ஆய்வு செய்தாா்.
சின்னசேலம்,
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக நேற்று மாலை ஷ்ரவன்குமார் ஜடாவத் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து அவர் உடனடியாக, கனியாமூர் சக்தி மெட்ரிக் லேம்நிலைப்பள்ளிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாணவி ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்ததாக கூறப்படும் பகுதி மற்றும் கலவரக்காரர்களால் சூறையாடப்பட்ட பள்ளி வளாகம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
மேலும், பள்ளியில் எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள், எப்போது இருந்து இந்த பள்ளி இயங்கி வருகிறது என்று முழுவிவரத்தையும் அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்தார். இதையடுத்து உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி சம்பந்தமான விசாரணை விவரங்களையும் அவர் கேட்டறிந்தார். அப்போது வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.