< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி பகுதி   சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

தினத்தந்தி
|
6 Dec 2022 12:15 AM IST

கள்ளக்குறிச்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று நடைபெற்றது. இதையொட்டி நந்தி பெருமானுக்கு பன்னீர், இளநீர், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் உள்ள விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நந்தீஸ்வரருக்கும், காசி விஸ்வநாதருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல் தென்கீரனூர் அண்ணாமலையார், ஆலத்தூர், சோமண்டார்குடி ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

வீரட்டானேஸ்வரர் கோவில்

திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள சிவானந்த வல்லி வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ பூஜை நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள நந்தி பெருமானுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் திருக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள அ.பாண்டலம் அமிர்த நாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. முன்னதாக நந்தீஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதே போல் சங்கராபுரம் முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவில், மூக்கனூர் தாண்டுவனேஸ்வரர், மஞ்சபுத்தூர் கைலாசநாதர், வடபொன்பரப்பி சுப்ரீஸ்வரர், ராவத்தநல்லூர் வியாக்ரபுரீஸ்வரர், புதுப்பட்டு சொர்ணபுரீஸ்வரர், மூங்கில்துறைப்பட்டு முகிலேஸ்வரர், பாக்கம் சோளீஸ்வரர், ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில்களில் பிரதோஷ வழிபாடு வெகுவிமரிசையாக நடைபெற்றது.

மேலும் செய்திகள்