கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. சி.பி.எஸ்.இ. பள்ளி சாதனை
|10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. சி.பி.எஸ்.இ. பள்ளி சாதனை படைத்துள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. வித்யா சாகேத் சி.பி.எஸ்.இ. பள்ளி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளது. இதில் மாணவன் தினேஷ் 500-க்கு 492 மதிப்பெண், மாணவன் அறிவொளி-489, மாணவி ஐஸ்வர்யா-486 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தமிழ்பாடத்தில் 4 பேரும், ஆங்கிலத்தில் ஒருவரும், கணிதத்தில் 2 பேரும், சமூக அறிவியலில் 2 பேரும் என மொத்தம் 9 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும் 490 மதிப்பெண்களுக்கு மேல் ஒருவரும், 480 மதிப்பெண்களுக்கு மேல் 7 பேரும், 470 மதிப்பெண்களுக்கு மேல் 18 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 32 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 80 பேரும், 350 மதிப்பெண்களுக்கு மேல் 153 பேரும் எடுத்துள்ளனர்.
12-ம் வகுப்பு
சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 பொதுத்தேர்விலும் ஏ.கே.டி. வித்யா சாகேத் பள்ளி சாதனை படைத்துள்ளது. இப்பள்ளி மாணவி மழைஸ்ரீ 500-க்கு 481 மதிப்பெண், மாணவி ஸ்ரீநிதி-480, மாணவர்கள் தேஷாந்த்-478, சார்கேஷ்-478 மதிப்பெண் எடுத்துள்ளனர். இதேபோல் 480 மதிப்பெண்களுக்கு மேல் 2 பேரும், 470 மதிப்பெண்களுக்கு மேல் 12 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 28 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 88 பேரும், 350 மதிப்பெண்களுக்கு மேல் 188 பேரும் பெற்றுள்ளனர்.
இதுதவிர வேதியியல் பாடத்தில் 3 பேரும், இயற்பியல் பாடத்தில் ஒருவரும் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். சாதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளி தாளாளர் ஏ.கே.டி.மகேந்திரன், செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், பள்ளி முதல்வர் நாகேஸ்வர ரெட்டி, மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில், ஜீனத் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினார்.