< Back
மாநில செய்திகள்
காளியம்மன் திருநடன உற்சவம்
அரியலூர்
மாநில செய்திகள்

காளியம்மன் திருநடன உற்சவம்

தினத்தந்தி
|
17 Jun 2022 12:25 AM IST

தா.பழூர் அருகே உள்ள மகா காளியம்மன் கோவிலில் திருநடன உற்சவம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிலால் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருநடன உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் திருநடன விழா தொடங்கியது. அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான காளியம்மன் திருநடன உற்சவம் வெகு விமரிசையாக தொடங்கியது. கிராமத்தின் முக்கிய வீதிகளில் அம்மன் வீடு வீடாக சென்று பக்தர்களின் வழிபாடுகளை ஏற்று அருள்வாக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு பக்தர்கள் மாவிளக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் சிலால் மற்றும் வாணதிரையன் பட்டினம் பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்