< Back
மாநில செய்திகள்
காவனூரில் காளி ஆட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

காவனூரில் காளி ஆட்டம்

தினத்தந்தி
|
24 May 2022 12:57 AM IST

காவனூரில் காளி ஆட்டம் நடந்தது.

வி.கைகாட்டி:

அரியலூர் மாவட்டம் காவனூர் கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் காளி ஆட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் காளியம்மன் ஆட்ட திருவிழா தொடங்கியது. அன்று முதல் வகையறாக்கள் வாரியாக மண்டகப்படி நடந்து, ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காளியம்மன் வீதி உலா நடந்தது. வீடுகளில் இருந்து பொதுமக்கள் பழங்கள், மாவிளக்கை கொண்டு சென்று காளியம்மனை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் மற்றும் காளி ஆட்டம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக நாச்சார்குளத்தில் சக்தி அழைத்து காலை பால்குடம் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மாலை 5 மணிக்கு மேல் காளியாட்டம் நிகழ்ச்சி நடந்தது. காவனூரை சுற்றியுள்ள ஊர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு காளி ஆட்டத்தை பார்த்தனர்.

மேலும் செய்திகள்