< Back
மாநில செய்திகள்
மாநில அளவிலான களரிப்போட்டி
திருப்பூர்
மாநில செய்திகள்

மாநில அளவிலான களரிப்போட்டி

தினத்தந்தி
|
24 Jun 2023 11:30 PM IST

மடத்துக்குளம் அருகே உள்ள சோழமாதேவியில் மாநில அளவிலான களரிப்போட்டி நடைபெற்றது.

மடத்துக்குளம் அருகே உள்ள சோழமாதேவியில் மாநில அளவிலான களரிப்போட்டி நடைபெற்றது.

தற்காப்புக்கலை

பழந்தமிழர்களின் தற்காப்புக் கலைகளில் களரியும் ஒன்றாகும். அடிமுறை என்று அழைக்கப்படும் இந்த கலை தற்போது கேரளாவில் புகழ் பெற்று விளங்குகிறது. கத்தி, வாள், சுருள்வாள், மான்கொம்பு, மழு போன்ற பல ஆயுதங்களும் களரி விளையாட்டில் பயன்படுத்தப்படுகின்றன.

மடத்துக்குளம் பகுதியில் தற்போது களரி விளையாட்டில் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் மடத்துக்குளத்தை அடுத்த சோழமாதேவியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்தமிழ்நாடு களரி பயட்டு அசோசியேசன் சார்பில் மாநில அளவிலான 6-ம் ஆண்டு களரி போட்டி நேற்று நடைபெற்றது.

உடற்பயிற்சி

போட்டியின் போது தமிழ்நாடு களரி பயட்டு அசோசியேஷன் செயலாளர் வீரமணி ஆசான் வரவேற்றுப் பேசினார். எஸ்.எம். டிராவல்ஸ் நாகராஜ், சத்யம் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாரன் களரி போட்டிகளை தொடங்கிவைத்து, உடற்பயிற்சி நல்ல திறமைகளை வளர்க்கும் என்பதை மகாபாரதக் கதை மூலம் விளக்கினார்.

நிகழ்ச்சியில் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஈஸ்வரசாமி, பொள்ளாச்சி தொகுதி சண்முகசுந்தரம் எம்.பி., மடத்துக்குளம் தாசில்தார் செல்வி, சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை செல்வராஜ், ஜி.வி.ஜி. பேப்பர் மில் சங்கர் மகாதேவன், பணி நிறைவு நூலகர் கணேசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். போட்டிகளில் கோவை, திண்டுக்கல், திருப்பூர், சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த களரி பயட்டு போட்டியாளர்கள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர். போட்டிக்கான ஏற்பாடு களை தமிழ்நாடு களரி பயட்டு அசோசியேசன் செயலாளர் வீரமணி செய்திருந்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்