< Back
மாநில செய்திகள்
கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
தேனி
மாநில செய்திகள்

கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

தினத்தந்தி
|
21 Oct 2023 1:15 AM IST

ெபரியகுளம் அருகே தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது.

பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டியில் தேனி வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர். பெரியகுளம் எம்.எல்.ஏ.வுமான, தெற்கு ஒன்றிய செயலாளருமான கே.எஸ்.சரவணக்குமார், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.மகாராஜன், மாவட்ட அவைத்தலைவர் பி.டி.செல்லப்பாண்டியன், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தங்கவேல், வடுகப்பட்டி பேரூராட்சி தலைவர் நடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எல்.எம். பாண்டியன் வரவேற்றார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மாநில உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எல்.மூக்கையா, மீனவர் நலவாரிய உறுப்பினர் கே.எம்.முருகன், பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகாயி காமராஜ் உள்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் வடுகப்பட்டி பேரூர் செயலாளர் காசி விஸ்வநாதன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்