< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத் தொடக்க விழா: காஞ்சீபுரம் பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் கலெக்டர் ஆய்வு
|10 Sept 2023 4:06 PM IST
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத் தொடக்க விழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சீபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் வருகிற 15-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதையொட்டி நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சீபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. கு.செல்வப்பெருந்தகை, காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர், படப்பை ஆ.மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.