< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் நாளை திறப்பு - போக்குவரத்து மாற்றம்
|14 July 2023 2:49 PM IST
முதல்-அமைச்சரின் வருகையையொட்டி மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் திறப்பு விழா 15-ந்தேதி(நாளை) நடைபெறுகிறது. சுமார் ரூ.206 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார்.
இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை வருகிறார். முதல்-அமைச்சரின் வருகையையொட்டி மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி நத்தம் சாலையில் ஐ.ஓ.சி. ரவுண்டானா சந்திப்பு முதல் ஆத்திகுளம் சந்திப்பு வரையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.