< Back
மாநில செய்திகள்
கடமலை-மயிலை ஒன்றியக்குழு கூட்டம்
தேனி
மாநில செய்திகள்

கடமலை-மயிலை ஒன்றியக்குழு கூட்டம்

தினத்தந்தி
|
5 Oct 2023 1:15 AM IST

மயிலாடும்பாறையில் கடமலை-மயிலை ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

மயிலாடும்பாறையில் உள்ள கடமலை-மயிலை ஒன்றிய அலுவலகத்தில் நேற்று ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் சித்ரா சுரேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர்கள் பாலகிருஷ்ணன், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 10 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கிய உடன் கவுன்சிலர்களின் ஒப்புதலுக்காக வரவு, செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது. பின்னர் கிராம பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு ஒன்றியக்குழு தலைவர் மற்றும் ஆணையர்கள் பதிலளித்தனர். கூட்டத்தில் ஒன்றிய மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்