< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கச்சத்தீவு விவகாரம்: வரலாறு தெரியாமல் உளறுகிறார்கள்: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கடும் தாக்கு
|18 Aug 2023 12:19 PM IST
இலங்கைக்கு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதாக வரலாறு தெரியாமல் உளறிக் கொண்டு இருக்கிறார்கள் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கடுமையாக தாக்கி பேசினார்.
ராமேஸ்வரம்,
ராமேஸ்வரம் மண்டபத்தில் இன்று நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது, இலங்கைக்கு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதாக வரலாறு தெரியாமல் உளறிக் கொண்டு இருக்கிறார்கள். கச்சத்தீவுக்காக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அதிமுகதான். தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் விஷயத்தை எப்போதும் அதிமுக தெளிவாக செய்கிறது.
கச்சத்தீவை தாரைவார்க்கக் கூடாது என டெல்லி சென்று அப்போதைய முதல் அமைச்சர் கருணாநிதி வலியுறுத்தினார். கச்சத்தீவு இலங்கை அரசுக்கு உகந்ததாக எக்காலத்திலும் இருந்தது இல்லை என கருணாநிதி கடிதம் எழுதினார். இந்தியாவின் ஒரு பகுதியான கச்சத் தீவை மாநில அரசான திமுக தாரைவார்த்ததாக அடிப்படை அறிவு இன்றி பேசுகின்றனர்" என்றார்.