ராணிப்பேட்டை
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து மீனவர்களின் உரியமையை நிலைநாட்ட வேண்டும்-அர்ஜூன் சம்பத்
|கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து மீனவர்களின் உரியமையை நிலைநாட்ட வேண்டும் என அர்ஜூன் சம்பத் வலியுறுத்தி உள்ளார்.
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து மீனவர்களின் உரியமையை நிலைநாட்ட வேண்டும் என அர்ஜூன் சம்பத் வலியுறுத்தி உள்ளார்.
வாலாஜாபேட்டை அருகே இலங்கை தமிழர்கள் முகாமிற்கு இந்த மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வந்தார். அவர்களை இடமாற்றம் செய்வதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அகதிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''இலங்கைக்கு செல்ல விருப்பம் இல்லாமல் வாலாஜாவில் உள்ள முகாமில் வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். இடமாற்றம் செய்வதன் மூலம் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதால் இலங்கை தமிழர்களை இடமாற்றம் செய்யும் முயற்சியை கைவிட வேண்டும்.
கச்சத்தீவு ஒப்பந்தத்தின் மூலம் மீனவர்களின் உரிமை பாதிக்கப்படுவதால், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தது போல, கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்'' என்றார்.