< Back
மாநில செய்திகள்
உடுமலை எஸ்.வி.புரம் செந்தில்குமார் நினைவு கபடிக்குழுவுக்கு முதல் பரிசு
திருப்பூர்
மாநில செய்திகள்

உடுமலை எஸ்.வி.புரம் செந்தில்குமார் நினைவு கபடிக்குழுவுக்கு முதல் பரிசு

தினத்தந்தி
|
8 Aug 2022 11:43 PM IST

மாநில அளவிலான கபடி போட்டியில் உடுமலை எஸ்.வி.புரம் செந்தில்குமார் நினைவு கபடிக்குழுவுக்கு முதல் பரிசு கிடைத்தது

மாநில அளவிலான கபடி போட்டியில் உடுமலை எஸ்.வி.புரம் செந்தில்குமார் நினைவு கபடிக்குழுவுக்கு முதல் பரிசு கிடைத்தது


உடுமலை அருகே எஸ்.வி.புரத்தில் உள்ள சேரன் கபடிக்குழுவின் சார்பில் 32-வது ஆண்டு மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடிப்போட்டிகள் 2 நாட்கள் நடந்தது. போட்டிகள் பகலிலும், இரவிலும் மின் ஒளியிலும் நடந்தது. கபடி போட்டிகளுக்காக மைதானத்தில் தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டு, அதில் போட்டிகள் நடந்தது. போட்டிகளில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த கபடி விளையாட்டுக் குழுவினர் கலந்துகொண்டனர். இதில் ஆண்களுக்கான பிரிவில் 90 அணிகளும், பெண்களுக்கான பிரிவில் 18 அணிகளும் கலந்து கொண்டன.

இதில் ஆண்களுக்கான போட்டிகளில் எஸ்.வி.புரம் பி.எல்.செந்தில்குமார் நினைவு கபடிக்குழுவிற்கு முதல் பரிசு கிடைத்தது. 2-வது பரிசு சேரன் கபடிக்குழுவிற்கும், 3-வது பரிசு கோவை கே.சி.கே. கபடிக்குழுவிற்கும், 4-வது பரிசு கோவை நியூ 7ஸ்டார் கபடிக்குழுவிற்கும் கிடைத்தது.

பெண்களுக்கான போட்டிகளில் முதல் பரிசு மதுரை சித்தம்பட்டி சி.பி.ஆர்.கபடிக்குழுவிற்கும், 2-வது பரிசு எஸ்.வி.புரம் சேரன் கபடிக்குழுவிற்கும், 3-வது பரிசு திருப்பூர் ஏ.வி.பி.கல்லூரி கபடிக்குழுவிற்கும், 4-வது பரிசு திருச்செங்கோடு கபடிக்குழுவிற்கும் கிடைத்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகளை நன்கொடையாளர்கள் வழங்கினர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை எஸ்.வி.புரம் சேரன் கபடிக்குழுவினர் செய்திருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்