< Back
மாநில செய்திகள்
வடுவூரில் மாநில கபடி போட்டி:  கட்டக்குடி அணி முதலிடம்
திருவாரூர்
மாநில செய்திகள்

வடுவூரில் மாநில கபடி போட்டி: கட்டக்குடி அணி முதலிடம்

தினத்தந்தி
|
10 July 2022 6:42 PM IST

வடுவூரில் நடந்த மாநில கபடி போட்டியில் கட்டக்குடி அணி முதலிடம் பிடித்தது.

வடுவூரில் மாநில அளவிலான ஆண்களுக்கான கபடி போட்டி நடந்தது. இந்த கபடி போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த கபடி அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் கட்டக்குடி விளையாட்டு கழக அணி 26 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது. வடுவூர் ஒய்.ஆர்.சி. அணி 25 புள்ளிகள் பெற்று 2-ம் இடத்தை பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியில் வடுவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு, மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர்கள் ராஜேந்திரன் (திருவாரூர்), பக்கிரிசாமி (தஞ்சை), திருவாரூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழக துணைத்தலைவர் பொன்கோவிந்தராஜ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

மேலும் செய்திகள்