< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
கபடி போட்டி நடத்த தடை
|7 July 2022 12:13 AM IST
கபடி போட்டி நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
முதுகுளத்தூர் அருகே விளங்களத்தூர், கீழகன்னிசேரி கிராமத்தினரிடையே கபடி போட்டி தோல்வி தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பினர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த மோதலை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை அனைத்து காவல் உட்கோட்டங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கபடி போட்டி நடத்த அனுமதி வழங்க கூடாது என உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டியும், இனிவரும் காலங்களில் அனைத்து காவல் நிலைய சரகங்களிலும் கபடி போட்டி நடத்த அனுமதி வழங்க கூடாது. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.