< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
41 அணிகள் பங்கேற்ற கபடி போட்டி
|20 Jun 2023 12:11 AM IST
வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் - சி.வி.பட்டறை கிராமத்தில் கபடி போட்டி நடைபெற்றது.
வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் - சி.வி.பட்டறை கிராமத்தில் கபடி போட்டி நடைபெற்றது. கிருஷ்ணகிரி, ஓசூர், வேலூர், வாணியம்பாடி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 41 அணிகள் கலந்து கொண்டு மோதின.
இதில் சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார். மொத்தம் 8 பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் பேரூராட்சி செயலாளர் சரவணன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் ஜெகன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கீதா, சரவணன், தினேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.