< Back
மாநில செய்திகள்
மாணவிகளுக்கான கபடி போட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மாணவிகளுக்கான கபடி போட்டி

தினத்தந்தி
|
2 Sept 2023 12:23 AM IST

மாணவிகளுக்கான கபடி போட்டி நடந்தது.

பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு வேப்பூர் குறுவட்ட அளவிலான 14, 17, 19 வயதுகளுக்கு உட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான கபடி போட்டி, பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நேற்று தனித்தனியாக நடந்தன.

போட்டியில் வேப்பூர் குறு வட்டத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பள்ளி அணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகளின் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முதலிடம் பிடித்த அணிகள் மாவட்ட அளவிலான கபடி போட்டியில் விளையாடவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை பரவாய் அரசு உயர்நிலைப்பள்ளி செய்திருந்தது.

மேலும் செய்திகள்